சூர்யா 41 திரைப்படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் சூர்யா.
‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் பாலாவுடன் இணைந்துள்ளார். ‘சூர்யா 41’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. சூர்யாவை வைத்து ‘பிதாமகன்’, ‘நந்தா’ ஆகிய படங்களை இயக்கியவர் பாலா. அவருக்கும் சூர்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும், பிரச்னை தீவிரமாகும் பட்சத்தில் படம் நிறுத்தப்படலாம் என்றும் சில நாட்களுக்கு முன்பு பேசப்பட்டது.
தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் சூர்யா. சூர்யா 41 படத்தின் செட்டில் இயக்குனர் பாலாவுடன் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்த அவர், “மீண்டும் படப்பிடிப்புக்கு வர காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். படத்தின் முதல் ஷெட்யூலுக்குப் பிறகு கன்னியாகுமரியில் இருந்து திரும்பிய சூர்யா, படத்தில் வரும் தனது தோற்றத்தை ரசிகர்களிடத்தில் பகிர்ந்துள்ளார்.
இப்படத்தில் சூர்யாவைத் தவிர, கிருத்தி ஷெட்டி, மமிதா பைஜு ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ஜோதிகா முக்கியப் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று ஊகிக்கப்படுகிறது. படத்தின் நடிகர்கள் மற்றும் கதைகளம் பற்றி விரிவாக அறிந்துக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
சிறிய முதலீட்டில் மாபெரும் வசூல்... 300 சதவீதம் லாபம் சம்பாதித்த காத்து வாக்குல ரெண்டு காதல்
Waiting to be back on sets…!! #Suriya41 pic.twitter.com/enuJ5MNbZJ
— Suriya Sivakumar (@Suriya_offl) May 26, 2022
படங்களைப் பொறுத்தவரை, வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பில் சூர்யா விரைவில் இணையவுள்ளார். தவிர இயக்குனர் சிவாவுடன் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Suriya, Director bala