Home /News /entertainment /

போட்டோகிராபர்களிடம் இருந்து தனது பிள்ளைகளை காப்பாற்றிய சூர்யா!

போட்டோகிராபர்களிடம் இருந்து தனது பிள்ளைகளை காப்பாற்றிய சூர்யா!

சூர்யா - ஜோதிகா

சூர்யா - ஜோதிகா

அவர்களில் பெரும்பாலான ஃபோட்டோகிராஃபர்கள் சூர்யாவின் வேண்டுகோளை ஏற்ற நிலையில், ஒருவர் மட்டும் தொடர்ந்து கிளிக் செய்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மும்பை புகைப்பட கலைஞர்களிடம் இருந்து தனது குழந்தைகளை நடிகர் சூர்யா பாதுகாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் தற்போது மும்பையில் முகாமிட்டிருக்கிறார்கள். தற்போது அவர்கள் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படத்தின் ஹிந்தி ரீமேக்கை அக்‌ஷய் குமார் வைத்து தயாரித்து வருகின்றனர்.

    இதற்காக மும்பை சென்றுள்ள சூர்யா மற்றும் ஜோதிகாவுடன் அவர்களின் குழந்தைகளான தியா மற்றும் தேவ் ஆகியோரும் சென்றுள்ளனர். இவர்கள் நக்மா உள்ளிட்ட குடும்பத்தினரோடு அங்குள்ள பிரபல உணவகத்தில் ஒன்றாக உணவருந்தியது தற்போது மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரவு உணவிற்குப் பிறகு இயல்பாக வெளியே வந்த சூர்யா ஜோதிகா குடும்பத்தினரை மும்பை ஃபோட்டோகிராஃபர்கள் க்ளிக் செய்யக் காத்திருந்தனர். அப்போது தன்னையும் தனது மனைவியையும் மட்டும் படமெடுக்குமாறு புகைப்படக்காரர்களிடம் கேட்டுக் கொண்ட சூர்யா, குழந்தைகளின் பிரைவசியை மதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.



    அவர்களில் பெரும்பாலான ஃபோட்டோகிராஃபர்கள் சூர்யாவின் வேண்டுகோளை ஏற்ற நிலையில், ஒருவர் மட்டும் தொடர்ந்து கிளிக் செய்தார். அப்போது சூர்யா அவரை தடுத்து, தனது அன்புக்குரியவர்களுடன் காரில் ஏறும் வரை படம் எடுப்பதை நிறுத்தச் சொன்னார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.



    மீனா, ரம்பா உள்ளிட்ட 90’ஸ் நடிகைகளுக்கு பார்ட்டி வைத்த பிரபுதேவா!

    தொழில் முறையில் சூர்யாவின் தயாரிப்பில் அவரது சகோதரர் கார்த்தி மற்றும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள 'விருமன்' திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரைக்கு வருகிறது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ள சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சிறுத்தை சிவா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த பிறகு, பாலாவின் 'வணங்கான்' படத்தின் வேலையை சூர்யா மீண்டும் தொடங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Suriya, Jyothika

    அடுத்த செய்தி