Home /News /entertainment /

தனது மகளின் முதல் ஃபோட்டோவை பகிர்ந்த சூர்யா பட நடிகை… குவியும் வாழ்த்து

தனது மகளின் முதல் ஃபோட்டோவை பகிர்ந்த சூர்யா பட நடிகை… குவியும் வாழ்த்து

மகளுடன் நடிகை பிரணிதா

மகளுடன் நடிகை பிரணிதா

ஆடி அமாவாசையையொட்டி தனது கணவர் நிதின் ராஜுவுக்கு பிரணிதா பாதபூஜை செய்தார். இதுதொடர்பாக இன்ஸ்டாவில் பிரணிதா வெளியிட்ட பூஜை புகைப்படங்கள் வைரலாகின.

    முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை நடிகை பிரணிதா பகிர்ந்துள்ளார். அவருக்கும் அவரது மகளுக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


     


    சூர்யாவின் மாஸ், கார்த்தியின் சகுனி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் பிரணிதா. இவர், தென்னிந்திய மொழிகளில் பிரணிதா பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.


     


    நடிப்பிற்காக சைமா, ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட விருதுகளையும் பிரணிதா பெற்றிருக்கிறார். தொழில் அதிபர் நிதின் ராஜு என்பவரை கடந்த ஆண்டு திருமணம் பிரணிதா செய்துகொண்டார்




     

    திருமணத்தை தொடர்ந்து, படங்களில் நடிப்பதை பிரணிதா தவிர்த்து வந்தார். கணவரின் பிறந்தநாளையொட்டி தான் கர்ப்பமாக இருக்கும்  தகவலை ஸ்கேனிங் ஃபோட்டோவுடன் வெளியிட்டார். இந்த புகைப்படம் பரபரப்பாக பேசப்பட்டது. 


     


    நிதின் ராஜுபிரணிதா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மகளின் புகைப்படத்தை பிரணிதா முதன்முறையாக பதிவிட்டுள்ளார்.


     

    சமீபத்தில், ஆடி அமாவாசையையொட்டி தனது கணவர் நிதின் ராஜுவுக்கு பிரணிதா பாதபூஜை செய்தார். இதுதொடர்பாக இன்ஸ்டாவில் பிரணிதா வெளியிட்ட பூஜை புகைப்படங்கள் வைரலாகின. இதனை பாராட்டியும், விமர்சித்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.



    இந்நிலையில் மகளுடைய புகைப்படத்தை பிரணிதா வெளியிட்டுள்ளார். இந்த குழந்தைக்கு ஆர்ணா என்று பெயரிட்டுள்ளதாக பிரணிதா தெரிவித்திருக்கிறார்.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி