முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிவக்குமார் குடும்பத்தில் 3-வது தலைமுறை நடிகர்... நடிக்க வரும் சூர்யாவின் மகன் தேவ்?

சிவக்குமார் குடும்பத்தில் 3-வது தலைமுறை நடிகர்... நடிக்க வரும் சூர்யாவின் மகன் தேவ்?

பிரதீப் ரங்கநாதனுடன் தேவ்

பிரதீப் ரங்கநாதனுடன் தேவ்

இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் மூலம் தேவ் அறிமுகமாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் சூர்யாவின் மகன் தேவ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

நடிகர் சிவகுமாரை தொடர்ந்து அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் கோலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவராக உள்ளனர். இப்போது, சூர்யாவின் மகன் தேவ் தன் தந்தையின் பாதையை பின்பற்றுவார் எனத் தெரிகிறது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுடன் தேவ் மற்றும் இன்னொரு சிறுவன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களின் ஆர்வங்களை தூண்டியுள்ளது. அந்தப் படத்தில் இயக்குனர் பிரதீப், தேவ்விற்கு காட்சியை விளக்குகிறார்.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் மூலம் தேவ் அறிமுகமாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. தவிர, தேவ் இப்படத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இரண்டாவது திருமணத்துக்கு தயாரான நாக சைத்தன்யா? மணப்பெண் இவராமே...

சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகன் தேவ் பிறந்ததில் இருந்தே பிரபலமாக இருந்தார். முன்னதாக, நடிகர் சூர்யா தனது மகன் தேவுக்கு 11 வயதே ஆனதாகவும், ஆனால் 2022-ல் திரையரங்குகளில் வெளியான அவரது சமீபத்திய திரைப்படமான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை அவரால் புரிந்து கொள்ள முடிந்ததாகவும்,தேவ் அதை விரும்பியதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Suriya