உலகளாவிய சமூக ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியலில் நடிகர்கள் சூர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சமூகங்களை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்கள் மற்றும் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய பிரபலங்களை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
சமூகப் பொறுப்புள்ள திரைப்படங்களில் நடித்து வரும்
சூர்யா, 2021-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சமூக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அவரது மனைவி ஜோதிகாவும், 2D புரொடக்ஷன்ஸ் பேனரில் சூர்யாவுடன் இணைந்து திரைப்படங்களைத் தயாரிப்பதால் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Dhanush: தனுஷுக்கு ரஜினிகாந்த் கொடுத்த பரிசு... அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா?
அவர்களைத் தவிர நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலினும் 2021-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சமூக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளார். பல சமூக பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், இளைஞர்களை அரசியலுக்கு வர ஊக்குவிப்பதாலும் அவர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
மலையாள நடிகை சின்னு குருவிலாவை மணந்தார் நடிகர் ஹரீஷ் உத்தமன்
உலகளாவிய சமூக
ஆஸ்கார் விருது, அமெரிக்காவில் பிப்ரவரி 19-ம் தேதி நடக்கவிருக்கும், சர்வதேச வளர்ந்து வரும் நட்சத்திர விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும். தமிழ் சினிமாவைச் சேர்ந்த மூவரும் சர்வதேச அரங்கில் விருதை வாங்குவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.