அயலான், இன்று நேற்று நாளை படங்களின் இயக்குனர் ரவிகுமாரின் இயக்கத்தில், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
சைன்ஸ் ஜேனரில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் 2024-ல் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகளை முடிக்கவே ஓராண்டு ஆகும் என்று கூறப்படுகிறது
முன்னணி இயக்குனர்களின் படங்களில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். வெற்றி மாறனுடன் வாடி வாசல், பாலாவுடன் ஒரு படம், இயக்குனர் சிவாவுடன் ஒரு படம் என வரிசையாக அவருக்கு படங்கள் காத்திருக்கின்றன. இடையே கே.ஜி.எஃப். தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா படம் இயக்கவுள்ளார். இதில் சூர்யா நடிப்பார் என்று பேசப்படுகிறது.
இதையும் படிங்க - 'வட இந்தியா - தென்னிந்தியா என சினிமாவை பிரிப்பதை விரும்பவில்லை' - இளம் நடிகர் டைகர் ஷெரோப் கருத்து
இந்த லிஸ்டை முடிப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகக்கூடும் நிலையில், இன்று நேற்று நாளை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ரவிகுமாரின் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
ரவிகுமார் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க - Thalapathy66 அப்டேட் கொடுத்த சரத்குமார்... 'பவர்ஃபுல் ஸ்க்ரிப்ட்' என பாராட்டு
சூர்யாவுடன் ரவிகுமார் இணையும் படம் சைன்ஸ் ஜேனரில் பிரமாண்டமாக உருவாக்கப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதே படத்தின் மையக்கரு என தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இதற்கான ப்ரீ புரொடக்சன் பணிகளை முடிப்பதற்கு ஓராண்டு ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.