சூர்யாவின் 39-வது பட இயக்குநர் மாற்றம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யாவின் 39-வது பட இயக்குநர் மாற்றம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் சூர்யா
  • Share this:
சூரரைப் போற்று திரைப்படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் 39-வது படத்தை இயக்குநர் சிவா இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக இயக்குநர் ஹரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சூர்யாவின் 39-வது படத்தை விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்குவதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால் சிவா ரஜினிகாந்தின் அண்ணாத்த பட வேலைகளில் பிஸியானார். அதேபோல் சூர்யா - சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் சூர்யாவின் 39-வது படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், ஹரி இயக்கத்தில் சூர்யா ‘அருவா’ என்ற டைட்டிலில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சூர்யா நடிக்கும் 39-வது படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இயக்குநர் ஹரி இயக்குகிறார். ‘அருவா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது சூர்யா, இயக்குநர் ஹரி இணையும் 6-வது படம். இயக்குநர் ஹரியின் 16-வது படம்.




இசையமைப்பாளர் டி.இமான் சூர்யாவுடனும், ஹரியுடனும் முதல்முறையாக இணைகிறார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி ஒரேகட்டமாக படப்பிடிப்பை முடித்து 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இயக்குநர் சிவாவுக்கு பதிலாக ஹரி மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்த எந்தவித தகவலும் இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: திருநங்கைகளுக்கு வீடுகள் கட்ட லாரன்ஸ்க்கு ₹ 1.5 கோடி நிதி கொடுக்கும் அக்‌ஷய்குமார்!
First published: March 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading