Suriya | வழக்கறிஞர் அவதாரத்தில் சூர்யா - வெளியானது ஜெய்பீம் படத்தின் ஃபர்ஸ்லுக்

சூர்யா நடிக்கும் ஜெய்பீம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிக்கும் ஜெய்பீம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

  • Share this:
    நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தப்படம் திரையரங்குகளில் வெளிவந்திருந்தால் ரசிகர்கள் கொண்டாடிதீர்த்திருப்பார்கள். அதன்பிறகு அவருடைய படத்தை திரையரங்குகளில் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருகின்றனர். அவர், தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா என்ற ஆன்தாலஜி திரைப்படத்தில் கிட்டார் கம்பியின் மேல் நின்று என்று படத்தில் நடித்துள்ளார். அதுவிரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    நடிகர் சூர்யாவுக்கு இன்று 46-வது பிறந்தநாள். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துவரும் படங்களில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகிவருகின்றன. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அந்தப் படத்துக்கு எதற்கும் துணிந்தவன் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.



    அதன் தொடர்ச்சியாக அந்தப் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. இந்தநிலையில், சூர்யாவின் சொந்த தயாரிப்பில் கூட்டத்தில் ஒருவன் படத்தின் இயக்குநர் ஞானவேலின் இயக்கத்தில் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

    ஜெய்பீம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்


    அந்தப் படத்துக்கு ஜெய்பீம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டர் சூர்யா வழக்கறிஞர் உடையுடன் இருக்கிறார். அவருடைய உடையில் மங்கலாக உயர் நீதிமன்றம் தெரிகிறது. கீழே பழங்குடியின மக்கள் தங்கள் வளங்களை இழந்து பாதிக்கப்பட்டு நிற்பதுபோல கூட்டமாக நிற்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பழக்குடி அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதிமன்றத்தில் போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார் என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. சூர்யாவின் பட ஃபோஸ்டர்கள் தொடர்ந்து வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
    Published by:Karthick S
    First published: