Home /News /entertainment /

பாஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் 2 விருதுகளை வென்ற ஜெய் பீம்!

பாஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் 2 விருதுகளை வென்ற ஜெய் பீம்!

ஜெய் பீம்

ஜெய் பீம்

ஜெய் பீம் தமிழ்நாட்டின் பழங்குடியினருக்கு தனது இடைவிடாத முயற்சியின் மூலம் நீதி கிடைக்கச் செய்த ஆர்வலர்-வழக்கறிஞர் சந்துரு நடத்திய உண்மையான வழக்கு.

    சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் பாஸ்டன் சர்வதேச பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.

    நடிகர் சூர்யா நடித்த டி.ஜே.ஞானவேல் இயக்கிய ‘ஜெய் பீம்’ திரைப்படம், நவம்பர் 2021-ல் வெளியானது. அமேசான் ப்ரைமில் வெளியான இப்படம் விமர்சன ரீதியான பாராட்டுகளை பெற்றது. சூர்யா, லிஜோமோல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ள இப்படம் கடந்த சில மாதங்களாக ஏராளமான விருதுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் பாஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில், இண்டி ஸ்பிரிட் சிறந்த நடிகை மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகிய விருதுகளை ஜெய்பீம் வென்றுள்ளது.

    நடிகை லிஜோமோல் ஜோஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் ஆகியோர் முறையே இண்டி ஸ்பிரிட் சிறந்த நடிகை மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்றனர். கர்ப்பிணி மனைவி தனது கணவர் போலீஸ் காவலில் காணாமல் போனதும், வழக்கறிஞர் சந்துருவிடம் உதவி கோருவது தான் ஜெய் பீம் படத்தின் கதை.

    விஜய்யின் தளபதி 66-ல் ஷாம்... எகிறும் எதிர்பார்ப்பு!

    ஜெய் பீம் தமிழ்நாட்டின் பழங்குடியினருக்கு தனது இடைவிடாத முயற்சியின் மூலம் நீதி கிடைக்கச் செய்த ஆர்வலர்-வழக்கறிஞர் சந்துரு நடத்திய உண்மையான வழக்கு. முன்னதாக நவம்பர் 2021-ல், டி.ஜே.ஞானவேல் இயக்கிய ‘ஜெய் பீம்’ படம் அதிகாரப்பூர்வமாக கோல்டன் குளோப்ஸ் 2022-ல் ‘சிறந்த ஆங்கிலம் அல்லாத மொழித் திரைப்படம்’ என்ற பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது.

    AK61: அஜித்தின் AK61 படத்தில் மஞ்சு வாரியர்!

    ஆஸ்கார் விருதுகளின் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் சேனலில் இயக்குநரின் நேர்க்காணலுடன் ஜெய் பீம் படத்தின் ஒரு காட்சியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி