• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூர்யாவின் ஜெய் பீம் ட்ரைலர் தேதி அறிவிப்பு!

சூர்யாவின் ஜெய் பீம் ட்ரைலர் தேதி அறிவிப்பு!

ஜெய் பீம்

ஜெய் பீம்

ஜெய் பீம் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

  • Share this:
    நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது ‘ஜெய் பீம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக அமேசான் ஓடிடி-யில் வெளியாகிறது. ஜெய் பீம் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

    பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஷான் ரோல்டன்.

    சில நாட்களுக்கு முன்பு ஜெய் பீம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. யூடியூபில் இதுவரை ஒன்றரை கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கிலும் இருக்கிறது. இதைத் தொடர்ந்து படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.



    இந்நிலையில் ஜெய் பீம் படத்தின் ட்ரைலர் வரும் அக்டோபர் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: