முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மெல்போர்னில் திரையிடப்படும் சூர்யாவின் ஜெய்பீம்!

மெல்போர்னில் திரையிடப்படும் சூர்யாவின் ஜெய்பீம்!

ஜெய்பீம்

ஜெய்பீம்

இவ்விழாவில் பராசக்தி திரைப்படம் திரையிடப்படுகிறது. சுதாகொங்கராவின் இணை இயக்குநரான சிவகணேஷ் இதனை இயக்கியுள்ளார்.

  • Last Updated :

சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

மெல்போர்னின் இந்திய திரைப்பட விழா (IFFM) அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அங்கு திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் ஜெய் பீம் இடம் பெற்றுள்ளது. தி ரோட் டு குதிரையர், பெரியநாயகி மற்றும் பராசக்தி ஆகிய தமிழ் திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படுகின்றன.

இந்த ஆண்டு, IFFM ஆகஸ்ட் 12-20 வரை நடைபெறுகிறது. அதில் வலுவான மற்றும் மனதைக் கவரும் கதைகளைக் கொண்ட சில அழகான இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஜெய்பீம் திரைப்படம் திரையிடப்படுகிறது. இவ்விழாவில் பராசக்தி திரைப்படம் திரையிடப்படுகிறது. சுதாகொங்கராவின் இணை இயக்குநரான சிவகணேஷ் இதனை இயக்கியுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் கமல் ஹாசன் குரலில் தமிழ்நாட்டு வரலாறு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    டாப்ஸியின் பாலிவுட் படமான டோபரா இவ்விழாவில் திரையிடப்படுகிறது. மேலும், இந்த விழாவில் அபிஷேக் பச்சன், கபில் தேவ், கபீர் கான், ஷெபாலி ஷா மற்றும் வாணி கபூர் ஆகியோருடன், நம்ம நட்சத்திரங்களான சமந்தா மற்றும் தமன்னா ஆகியோர் பங்கேற்கின்றனர். தனது அற்புதமான நடனத் திறமைக்கு பெயர் பெற்ற தமன்னா, விழாவில் நடக்கும் நடனப் போட்டிக்கு நடுவராகவும் அங்கம் வகிக்க இருக்கிறார்.

    First published:

    Tags: Jai Bhim