ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மகாராஷ்டிராவில் மக்கள் மத்தியில் திரையிடப்பட்ட ஜெய் பீம்

மகாராஷ்டிராவில் மக்கள் மத்தியில் திரையிடப்பட்ட ஜெய் பீம்

ஜெய் பீம் திரையிடல்

ஜெய் பீம் திரையிடல்

மகாராஷ்டிராவில் பொதுவெளியில் படத்தை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திரையிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சூர்யா தயாரித்து நடித்திருக்கும் ஜெய் பீம்  படம் எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஜெய் பீம் திரைப்படம் உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இருளர் பழங்குடி இளைஞரை பொய் வழக்கில் காவல்துறை அடித்தே கொன்ற சம்பவத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டது. இது எதேச்சையாக நடந்த நிகழ்வல்ல. காவல்துறை பொய் வழக்குகள் போடவும், தங்களுக்கு வேண்டியவர்களை காப்பாற்றவும் இருளர் பழங்குடி மக்களை பலிகடாவாக்குவது தொடர்கதை. அந்த நெடுங்கதையின் ஒரு விக்டிமின் கதைதான் ஜெய் பீம்.

இயக்குனர் ஞானவேல் அதனை அந்த மக்களின் வாழ்வோடும் வலியோடும் எடுத்தது எல்லைகளை கடந்து அனைவரிடமும் படத்தை கொண்டு போய் சேர்த்திருக்கிறது. படத்தைப் பார்த்த இருளர் பழங்குடியின மக்கள் எங்க வாழ்க்கையை அப்படியே எடுத்திருக்காங்க. எங்க கஷ்டத்தை அப்படியே சொல்லியிருக்காங்க என கண்ணீர்மல்க படத்தை அங்கீகரிக்கின்றனர்.

வெளிமாநிலங்களில் குறிப்பாக கேரளா, மகாராஷ்டிராவில் படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மகாராஷ்டிராவில் பொதுவெளியில் படத்தை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திரையிட்டுள்ளனர். லாக்கப் வன்முறையை அறிந்திருக்கும் இந்திய மக்களுக்கு இருளர் பழங்குடியினர் என்ற ஒரு பிரிவினர் தொடர்ந்து அந்த சித்திரவதைக்குள்ளாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு அம்மக்களுக்கு பல்வேறு சலுகைகளை, உதவிகளை அறிவித்து உடனடியாக அதனை நிறைவேற்றி வருகிறது.

பிற மாநிலங்களிலும் அத்தகையை முன்னெடுப்புகளை அரசுகள் செய்ய ஜெய் பீம் தூண்டுதலாக இருக்கும் என்பதை இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு திரைப்படமாக அதன் உச்சபட்டச சாத்தியத்தை செய்து காட்டியிருக்கிறது ஜெய் பீம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Actor Suriya