• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜெய் பீம்!

ஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜெய் பீம்!

ஜெய்பீம்

ஜெய்பீம்

ஐஎம்டிபி இணையத்தில் புதிய சாதனை படைத்துள்ளது சூர்யாவின் ஜெய்பீம்

  • Share this:
    சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் ஐ.எம்.டி.பி-யில் அதிக ரேட்டிங்குகளைப் பெற்றுள்ளது.

    நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யாவின் 39-வது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    இருளர் பழங்குடியினத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது ஜெய் பீம் திரைப்படம். சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம், கடந்த வாரம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் சூர்யா மாற்றும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஐஎம்டிபி இணையத்தில் புதிய சாதனை படைத்துள்ளது ஜெய்பீம். ஹாலிவுட், பாலிவுட் தொடங்கி பல்வேறு படங்களின் விமர்சனங்கள் இடம்பெறும் ஐஎம்டிபி தளம், உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தளத்தில் 53,000 வாக்குகளைப் பெற்று, 9.6 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது ஜெய் பீம். இந்தப் படத்துக்குப் பின் 'தி ஷஷாங் ரிடம்ஷன்' என்ற ஹாலிவுட் திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: