Home /News /entertainment /

ஆஸ்கர் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஜெய் பீம்!

ஆஸ்கர் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஜெய் பீம்!

ஜெய் பீம்

ஜெய் பீம்

ஜெய் பீம் படத்தின் சில காட்சிகள், இயக்குனர் ஞானவேலின் பேட்டியுடன் ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்தியப் படம் ஒன்றின் காட்சிகள் இப்படி பதிவேற்றப்படுவது இதுவே முதல்முறை

ஜெய் பீம் திரைப்படத்தின் மகுடத்தில் மற்றுமோர் பெருமைமிகு இறகு சேர்ந்திருக்கிறது.

இருளர் பழங்குடியினர் சாதி காரணமாக சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருப்பதை ஜெய் பீம் திரைப்படம் உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியது. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினர்களாக இருப்பதால் காவல்துறை என்ற அதிகார சிஸ்டம் அவர்களை எப்படி வன்முறைக்கும் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் உள்படுத்துகிறது என்பதை ஜெய் பீம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உரக்கச் சொன்னது.

அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இப்படம் இன்று 75 தினங்களை நிறைவு செய்கிறது. மொழி, மாநில எல்லைகளை கடந்து ஜெய் பீம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் மக்கள் முன் ஜெய் பீம் திரையிடப்பட்டது. பல்லைக்கழகங்கள் ஜெய் பீமை திரையிட்டன. கல்விக்கூடங்களில் ஜெய் பீம் திரைப்படம் விவாதிக்கப்பட்டது.

Dhanush: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?

ஒடுக்கப்பட்டவர்களின் வலியை பேசும் உரத்த சாதனமாக ஜெய் பீம் முன்வைக்கப்பட்டது. ஐஎம்டிபி இணையதளத்தில் அதிக மதிப்பெண்களுடன் முதலிடத்தையும் ஜெய் பீம் பிடித்தது.
ஜெய் பீம் படத்தின் சில காட்சிகள், இயக்குனர் ஞானவேலின் பேட்டியுடன் ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்தியப் படம் ஒன்றின் காட்சிகள் இப்படி பதிவேற்றப்படுவது இதுவே முதல்முறை என்கிறார்கள். இது ஜெய் பீமுக்கு கிடைத்திருக்கும் சர்வதேச அங்கீகரத்தின் வெளிப்பாடு.

Dhanush Aishwarya: பெருமைக்குரிய மனைவி எனக் குறிப்பிட்ட 3 மாதத்திற்குள் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா



Dhanush Aishwarya: கமல் ஹாசன் முதல் தனுஷ் வரை... அதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து மற்றும் உறவு முறிவு கதைகள்!

இந்தியாவின் பிறமொழி சினிமாக்கள் புராண, இதிகாச மோகங்களில் சிக்கிக் கொண்டிருக்கையில் தமிழ் சினிமா சமூகநீதி அரசியல் பேசும் திரைப்படங்களை தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறது. இது ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டிய தருணம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Suriya, Jai Bhim

அடுத்த செய்தி