முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தொடரும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ சர்ச்சை - மெளனம் காக்கும் உச்ச நட்சத்திரங்கள்

தொடரும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ சர்ச்சை - மெளனம் காக்கும் உச்ச நட்சத்திரங்கள்

ஜெய் பீம்

ஜெய் பீம்

நாளுக்கு நாள் ஜெய் பீம் பட விவகாரம் வேகமெடுத்திருக்கும் நிலையில், ரசிகர்களும், பொதுமக்களும்,கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சூர்யாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

  • Last Updated :

நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் பட பிரச்னைக்கு பெரிய நடிகர்கள் யாரும் வாய் திறக்காமல் இருப்பது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். சூர்யாவின் 39-வது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

படத்தில் வில்லன் வீட்டில் அக்னி சட்டி காலண்டர் இருப்பது வன்னியர் சமூகத்தை குறிப்பிடுவது போல் இருப்பதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, அது சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் ஜெய் பீம் படத்தில் வில்லனாக நடித்திருந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு குரு மூர்த்தி எனப் பெயரிடப்பட்டிருந்தது.

இதையடுத்து வன்னியர் சங்க தலைவர் காடு வெட்டி குருவின் பெயர் குற்றவாளி கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாக பிரச்னை கிளம்பியது. தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சூர்யாவுக்கு பல்வேறு கேள்விகள் கேட்டு அறிக்கை வெளியிட்டதுடன், தியேட்டர்களில் படம் திரையிடுவதை வன்னிய சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தும் சூழல் ஏற்படலாம் என்றும் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கைக்கு சூர்யாவும் விரிவான பதில் அளித்திருந்தார்.

நாளுக்கு நாள் ஜெய் பீம் பட விவகாரம் வேகமெடுத்திருக்கும் நிலையில், ரசிகர்களும், பொதுமக்களும்,கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சூர்யாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நேற்றிலிருந்து திரையுலகினரும் சமூக வலைதளங்கள் வாயிலாக சூர்யாவுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் சக நடிகருக்கு பிரச்னை ஏற்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் மெளனம் காப்பது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் தனது செயல்களால் மக்களின் அன்பை சூர்யா அதிகளவில் சம்பாதித்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Suriya