Home /News /entertainment /

‘தரமான மனிதர் சூர்யா’ – இயக்குனர் ஷங்கர் பாராட்டு

‘தரமான மனிதர் சூர்யா’ – இயக்குனர் ஷங்கர் பாராட்டு

சூர்யா - ஷங்கர்

சூர்யா - ஷங்கர்

விருமன் பட பாடல்கள் அருமையாக உள்ளன. கஞ்சா பூ கண்ணால, மதுர வீரன் பாட்டு அருமையாக இருக்கிறது.- ஷங்கர்

    தனிப்பட்ட வாழ்க்கையிலும் கல்விக்காக, சமூக நலனுக்காக குரல் கொடுத்து தரமான மனிதராக சூர்யா இருக்கிறார் என இயக்குனர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள விருமன் படத்தில் கார்த்தி மற்றும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கார்த்தி நடித்த கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா, விருமன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12ஆம் தேதி விருமன் திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் நேற்று படத்தின் ட்ரெய்லர் மட்டும் மற்றும் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது.

    கோப்ரா படத்தின் அப்டேட் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்… போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பு

    ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் ஷங்கர், பாரதிராஜா, சூர்யா ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

    விருமன் படத்தின் மூலம் ஷங்கரின் மகள் அதிதி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதுகுறித்து நிகழ்ச்சியில் ஷங்கர் பேசியதாவது-

    தரமான படங்களில் நடித்தும், தரமான படங்களை தயாரித்தும், தரமான நடிப்பை கொடுத்தும் சூர்யா நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையிலும் கல்விக்காக, சமூக நலனுக்காக குரல் கொடுத்து தரமான மனிதராக சூர்யா இருக்கிறார்.

    ரஜினியின் ஜெயிலர் படத்தில் கேங்ஸ்டராக நடிக்கும் வசந்த் ரவி…

    கார்த்தியுடன் மகள் அதிதி அறிமுகமானதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கூடிய விரைவில் சூர்யாவைப் போன்று கார்த்தியும், தேசிய விருதை வாங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    விருமன் பட பாடல்கள் அருமையாக உள்ளன. கஞ்சா பூ கண்ணால, மதுர வீரன் பாட்டு அருமையாக இருக்கிறது. இப்போது கிராமியப் பாடல்கள் அதிகம் வந்து விட்டன.

    ஆனால் அதிலும் ஒரு புதுமை, ஃப்ரெஷ்னஸ் கொண்டு வருவது என்பது சிறப்பான விஷயம். யுவன்ஷங்கர்ராஜா எத்தனை பாடல்களைப் போட்டாலும் அத்தனையும் ஃபிரஷ்ஷாக உள்ளன. அவருக்கு வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி