முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ET Review: குடும்பங்கள் கொண்டாடும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்!

ET Review: குடும்பங்கள் கொண்டாடும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்!

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன் இயக்குநர் பாண்டிராஜுக்கு ஹாட்ரிக் ஹிட்டாகவும், கண்ணபிரானாக கலக்கும் சூர்யாவுக்கு மிகவும் தேவையான பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகவும் இருக்கும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்கிய பாண்டிராஜ், மீண்டும் சன் பிக்சர்ஸுடன் இணைந்துள்ளார். அவர்கள் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கியுள்ளார். சூர்யா நடித்திருக்கும் இந்தப் படமும் பாண்டிராஜின் நம்ம வீட்டுப் பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் படங்களைப் போன்ற கிராமத்துப் பிண்ணனியில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது.

இதில் சூர்யாவுடன் இணைந்து சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதன் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இன்று எதற்கும் துணிந்தவன் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்

எதற்கும் துணிந்தவன் இயக்குநர் பாண்டிராஜுக்கு ஹாட்ரிக் ஹிட்டாகவும், கண்ணபிரானாக கலக்கும் சூர்யாவுக்கு மிகவும் தேவையான பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகவும் இருக்கும். பவர் நிரம்பிய உணர்வுப்பூர்வமான க்ளைமாக்ஸ். பெண்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள். மிகவும் வலுவான சமூகக் கோணம் கொண்ட மாஸ் கமர்ஷியல் என்டர்டெய்னர்.

எதற்கும் துணிந்தவன் முதல் பாதி - கமர்ஷியல் ஆக்‌ஷன் என்டர்டெய்னர். சூர்யா தனது ஆற்றல்மிக்க ஸ்கிரீன் பிரசன்ஸ் மூலம் படத்தை ஆள்கிறார். குடும்பத்துடன் அவர் இருக்கும் தருணங்கள் நன்றாக வேலை செய்கின்றன. அறிமுகம் மற்றும் இடைவேளை சிறப்பு.

நிறைமாத கர்ப்பத்தில் குத்தாட்டம் போட்ட விஜய் டிவி பிரபலம் - வைரலாகும் வீடியோ!

கமர்ஷியல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. பக்கா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் ரிலீஸ்.. சில போர்ஷன்ஸ் கரண்ட் ஜெனரேஷன்க்கு கிரிஞ்சாக தெரியலாம். ஆனால் பி&சி ஆடியன்ஸிடம் படம் பந்தயம் அடிக்கும். பாண்டியராஜ் வேற லெவல் பெர்ஃபார்மன்ஸ்.

மகளிர் தின வாரத்தில் இப்படம் கச்சிதமாக வந்துள்ளது, ஏனெனில் இரண்டாம் பாதியில் வரும் பல காட்சிகள் உணர்வுப்பூர்வமாக பார்வையாளர்களை வெல்லும். சில சமயங்களில் கொஞ்சம் ஓவர் தான், ஆனாலும் பரவாயில்லை.

2000-களின் பிற்பகுதியில், 2010-ன் முற்பகுதியில் இருந்த சூர்யா மீண்டு வந்துவிட்டார்.

சீட் நுனியில் அமரும் படி த்ரில்லர் க்ளைமேக்ஸ். பாண்டிராஜ் தான் இயக்குநரா என ஆச்சர்யம்.

முழுமையான ஆக்‌ஷன் பேக் செய்யப்பட்ட ஃபேமிலி என்டர்டெய்னர், ரசிகர்களின் சிறந்த தருணங்கள் மற்றும் சிறந்த சமூக செய்திகளுடன் மனதைத் தொடும் காட்சிகள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Suriya, Sun pictures