Home /News /entertainment /

எதற்கும் துணிந்தவன் படத்தின் தணிக்கைச் சான்று மற்றும் ரன்னிங் டைம்!

எதற்கும் துணிந்தவன் படத்தின் தணிக்கைச் சான்று மற்றும் ரன்னிங் டைம்!

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

பிப்ரவரி 4 ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. தேதி நெருங்கிவரும் நிலையில், படத்தின் புரமோஷனை முடுக்கிவிட்டுள்ளனர்.

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தணிக்கைச் சான்று பெற்றுள்ளது. அதன் ரன்னிங் டைமும் தெரிய வந்துள்ளது.

பாண்டிராஜின் முந்தையப் படம் நம்ம வீட்டுப் பிள்ளையை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. சிவகார்த்திகேயன் நடித்த அப்படம் லாபம் சம்பாதித்து தர, அவர்களே பாண்டிராஜின் அடுத்தப் படமான எதற்கும் துணிந்தவனை தயாரித்துள்ளனர். சூர்யா நடித்திருக்கும் இந்தப் படமும் பாண்டிராஜின் நம்ம வீட்டுப் பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் படங்களைப் போன்ற கிராமத்துப் பிண்ணனியில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது.

Dhanush Aishwarya: பெருமைக்குரிய மனைவி எனக் குறிப்பிட்ட 3 மாதத்திற்குள் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா

கூடுதலாக பொள்ளாச்சி பாலியல் சம்பவம் படத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தனது முந்தைய இரு படங்களைவிட அதிரடி ஆக்ஷன் காட்சிகளை எதற்கும் துணிந்தவனில் பாண்டிராஜ் அதிகம் வைத்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Dhanush: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?

பிப்ரவரி 4 ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. தேதி நெருங்கிவரும் நிலையில், படத்தின் புரமோஷனை முடுக்கிவிட்டுள்ளனர். வெளியான பாடல்களும் அமோக வரவேற்பை பெற்றன.

Dhanush Aishwarya: கமல் ஹாசன் முதல் தனுஷ் வரை... அதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து மற்றும் உறவு முறிவு கதைகள்!

இந்நிலையில் படம் தணிக்கைக்குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெரியவர்கள் துணiயுடன் படத்தைப் பார்க்கலாம். எதற்கும் துணிந்தவனின் ரன்னிங் டைம்; 2 மணி 31 நிமிடங்கள்.
பிப்ரவரி 4 ஆம் தேதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் படத்தை வெளியிடுகின்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Suriya, Sun pictures, Suriya

அடுத்த செய்தி