• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சொன்னதைச் செய்த சூர்யா... திரைத்துறையினருக்கு ரூ.1.5 கோடி உதவி

சொன்னதைச் செய்த சூர்யா... திரைத்துறையினருக்கு ரூ.1.5 கோடி உதவி

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

சூரரைப்போற்று திரைப்படத்தின் வெளியீட்டுத் தொகையிலிருந்து திரையுலகினருக்கு ரூ. 1.5 கோடியை சூர்யா வழங்கியுள்ளார்.

  • Share this:
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப்போற்று. இத்திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், குனித் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் இயங்காமல் உள்ளதால் தள்ளிபோனது.

    திரையரங்குகள் திறக்கப்படுவது கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் சூர்யா அறிவித்தார்.

    அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், “சூரரைப்போற்று திரைப்படத்தின் வெளியீட்டுத் தொகையிலிருந்து ரூ.5 கோடியை பொதுமக்களுக்கும், திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் கொரோனா யுத்தக் களத்தில் முன்நின்று பணியாற்றியவர்களுக்கும் பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளேன்” என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், முதற்கட்டமாக ஐந்து கோடியில் 1.5 கோடியை திரையுலகினருக்கு அளித்துள்ளார் நடிகர் சூர்யா. இதில் திரையுலகத்தின் தொழிலாளர்கள் அமைப்பான 'பெப்சி' க்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகையை பெப்சியின் தலைவர் ஆர். கே. செல்வமணியிடம், 80 லட்ச ரூபாயும், பெப்ஸியின் அங்கமான இயக்குநர் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் 20 லட்ச ரூபாயும் பிரித்து வழங்கப்பட்டது.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுக்கொண்டு, அதை தயாரிப்பளர்கள் சங்க தனி அலுவலரிடம் வழங்குகிறார். தென்னித்திய நடிகர் சங்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டடது. நடிகர் சங்கத்தலைவர் நாசர் பெற்றுக்கொண்டு அதை அவர், நடிகர் சங்க தனி அலுவலரிடம் வழங்குவார். இந்தத் தொகைகளுக்கான காசோலைகளை சிவக்குமார் வழங்கினார்.



    இந்த நிகழ்வில், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இயக்குநர் பாரதிராஜா தலைமையேற்க, நடிகர் சிவகுமார் முன்னிலை வகிக்கித்தார். 2டி பட நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன்
    மற்றும் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்,சுரேஷ் காமாட்சி லலித்குமார்,பங்கேற்றார்கள்.

    மீதமுள்ள தொகையின் பகிர்ந்தளிப்பு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: