Home /News /entertainment /

விருமன் வசூலில் இருந்து 25 லட்ச ரூபாயை நடிகர் சங்கத்துக்கு வழங்கிய சூர்யா!

விருமன் வசூலில் இருந்து 25 லட்ச ரூபாயை நடிகர் சங்கத்துக்கு வழங்கிய சூர்யா!

சூர்யா நன்கொடை

சூர்யா நன்கொடை

சூர்யா மற்றும் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட, 2020 ஆம் ஆண்டின் தேசிய விருது வென்றவர்கள் பாராட்டப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விருமன் திரைப்படத்தின் வசூலில் இருந்து 25 லட்ச ரூபாயை நடிகர் சங்கத்துக்கு நன்கொடை அளித்துள்ளார் நடிகர் சூர்யா.

    நடிகர் சூர்யா நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். அவரது தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் அவரது சகோதரர் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடித்த 'விருமன்' உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்றது. வார இறுதி மற்றும் சுதந்திர தின விடுமுறை என நீண்ட வார விடுமுறையில் இப்படம் நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் நடிகர் சங்கத்தின் 6-வது செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி கலந்துக் கொண்டனர். அந்த நிகழ்வில் சூர்யா மற்றும் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட, 2020 ஆம் ஆண்டின் தேசிய விருது வென்றவர்கள் பாராட்டப்பட்டனர்.

    7 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகும் சன் டிவி சீரியல்... விரைவில் எண்ட் கார்டு?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    'விருமன்' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, படத்தின் வசூல் பணத்தின் இருபத்தைந்து லட்ச ரூபாயை நடிகர் சங்க கட்டிடம் கட்டும் நிதிக்கு சூர்யா வழங்கினார். நிகழ்ச்சியில் தலைவர் நாசர், துணைத் தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன், பழம்பெரும் நடிகை சச்சு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Suriya, Tamil Cinema

    அடுத்த செய்தி