அண்ணனா நினைச்சு கேட்குறேன்... முன் ஜாமின் வாங்கி கொடுங்க - அரசியல் பிரபலத்திடம் சூர்யா தேவி கோரிக்கை

முன் ஜாமின் பெற்றுத் தரும்படி சூர்யா தேவி பிரபல நடிகரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அண்ணனா நினைச்சு கேட்குறேன்... முன் ஜாமின் வாங்கி கொடுங்க - அரசியல் பிரபலத்திடம் சூர்யா தேவி கோரிக்கை
சூர்யா தேவி
  • Share this:
வனிதா - பீட்டர் பால் திருமணத்தை விமர்சிப்பதற்காகவே யூடியூப் சேனல் தொடங்கியவர் சூர்யாதேவி. ஏற்கெனவே முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குறித்து அவதூறு பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்த சூர்யா தேவி, தற்போது வனிதா விஜயகுமார் திருமணத்தை கடுமையாக விமர்சித்து சமூகவலைதளங்களில் பிரபலமானார்.

இவர் மீது வனிதா விஜயகுமார் போரூர் மற்றும் வடபழனி காவல் நிலையத்தில் புகாரளித்ததை அடுத்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். இதனிடையே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவரை கொரோனா பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற பெண் காவல் ஆய்வாளரான ஜோதியும் பரிசோதனை செய்துகொண்டார்.

பரிசோதனை முடிவில் இவர்கள் இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் தலைமறைவாகிவிட்ட சூர்யா தேவி சென்னை மாநகராட்சி சுகாதர ஆய்வாளர், விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.


இருந்தாலும் யூடியூபில் அவ்வப்போது வீடியோ பதிவிட்டு வரும் சூர்யா தேவி தற்போது எஸ்.வி.சேகரிடம் உதவி கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், எஸ்.வி.சேகரை அல்லி குளம் நீதிமன்றத்தில் சந்தித்ததாகவும், தனக்கு முன் இந்த ஒருமுறை மட்டும் முன் ஜாமின் பெற்றுத்தரும்படியும் கோரிக்கை வைத்திருக்கிறார். அண்ணனாக நினைத்து இந்த உதவியை எஸ்.வி.சேகரிடம் கேட்பதாகவும் சூர்யா தேவி வீடியோவில் கூறியுள்ளார்.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading