வனிதா மீது நடவடிக்கை எடுங்க... சூர்யா தேவி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்

நடிகை வனிதா விஜயகுமார் அவதூறான செய்தி பரப்புவதாக சூர்யா தேவி என்பவர் சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

வனிதா மீது நடவடிக்கை எடுங்க... சூர்யா தேவி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்
வனிதா விஜயகுமார் | சூர்யா தேவி
  • Share this:
வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் என்ற விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநரை கடந்த மாதம் 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், பீட்டர் பால் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக போலீசில் புகாரளித்திருந்தார். இதையடுத்து பலரும் இத்திருமணம் குறித்து சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து தன் மீது அவதூறு பேசி வீடியோ வெளியிட்டு வருவதாக போரூர் காவல் நிலையத்தில் இரண்டு முறை வனிதா புகாரளித்துள்ளார். மேலும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வனிதா விஜயகுமார், சூர்யா தேவி, ரவீந்திரன் ஆகியோர் தொடர்ந்து என்னைப் பற்றி அவதூறாக பேசிவருவதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் சூர்யா தேவி கஞ்சா விற்பனையை பாதுகாப்பாக நடத்துவதற்காகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான ஆடியோ ஆதாரம் ஒன்றையும் வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் ஸ்ரீதர் இணையதளத்தில் வெளியிட்டதோடு, காவல்துறையினரிடம் ஆதாரங்களை கொடுத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.


இந்நிலையில் வனிதா விஜயகுமார் தன்னைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக சூர்யா தேவி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்திருக்கிறார்
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading