• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சூர்யா...!

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சூர்யா...!

சூர்யா

சூர்யா

நடிகர் சூர்யா புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் மாலையிட்டு தனது அஞ்சலியை செலுத்தினார். அப்போது அவர் உணர்ச்சிமிகுதியில் கண்கலங்கினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சமீபத்தில் இறந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தினார்.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் புனித் ராஜ்குமார். கன்னட திரையுலகின் பிதாமகனாக கருதப்படும் ராஜ்குமாரின் இளைய மகன். 2002 இல் நடிக்கத் தொடங்கிய புனித் ராஜ்குமார் குறுகிய காலத்தில் கன்னட மக்களின் மனங்களை கொள்ளை கொண்டார்.

பல நற்பணிகளை அவர் தொடர்ச்சியாக செய்து வந்தார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்தது இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடல்நலத்தில் அக்கறை கொண்டு முறையாக உடற்பயிற்சி செய்து வந்த புனித் ராஜ்குமாரின் மரணத்தை அவரது ரசிகர்களால் இன்னும் ஏற்றக் கொள்ள முடியவில்லை. அவர் இறந்த போது நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்



Also read... Bigg Boss Tamil 5: தலைவர் பதவிக்கு மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள் - கடுப்பான சிபி!

சில தினங்கள் முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் கர்நாடகா சென்று புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பிறகு நடிகர் விஜய் சேதுபதி சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், புனித் ராஜ்குமாரை ஒருமுறைகூட நேரில் சந்தித்ததில்லை, அவர் இவ்வளவு நல்ல விஷயங்கள் செய்திருக்கிறார் என்பது இறந்த பிறகே தெரியும் என்றார்.

இன்று நடிகர் சூர்யா புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் மாலையிட்டு தனது அஞ்சலியை செலுத்தினார். அப்போது அவர் உணர்ச்சிமிகுதியில் கண்கலங்கினார். சூர்யா நினைவிடத்துக்கு வந்த போது புனித் ராஜ்குமாரின் அண்ணன் சிவராஜ் குமாரும் உடனிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: