சூர்யாவின் மிரட்டலான ‘வாடிவாசல்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் - ரசிகர்கள் மகிழ்ச்சி

வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 

சூர்யாவின் மிரட்டலான ‘வாடிவாசல்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் - ரசிகர்கள் மகிழ்ச்சி
வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக்
  • Share this:
காப்பான் படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பணிகள் முடிவடைந்து கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு பின்னர் அருவா, வாடிவாசல் ஆகிய இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இதில் வாடிவாசல் இயக்கத்தை வெற்றிமாறன் இயக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: Happy Birthday Suriya | சூர்யாவின் சினிமா பயணம்

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.வாடிவாசல் என்ற குறுநாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதி 1959-ம் ஆண்டு வெளியானது.

ஏற்கெனவே எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அசுரனாக படமாக்கிய வெற்றிமாறன் அதில் வெற்றி கண்டதும் குறிப்பிடத்தக்கது.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading