நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து வெளியிட்ட சூர்யா பர்த்டே காமன் டிபி - அடிச்சு தூக்கும் ரசிகர்கள்

நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து வெளியிட்டுள்ள சூர்யாவின் பிறந்தநாளுக்கான காமென் டிபியை ட்ரெண்டாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து வெளியிட்ட சூர்யா பர்த்டே காமன் டிபி - அடிச்சு தூக்கும் ரசிகர்கள்
சூர்யா
  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா வரும் ஜூலை 23-ம் தேதி தனது 45-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அன்று அவர் நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.

நடிகர், தயாரிப்பாளர் மட்டுமின்றி அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்கள் கல்வி பெறவும் உதவி செய்து வருகிறார் சூர்யா. அதேவேளையில் அவரது ரசிகர்களும் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு சூர்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக சிறப்பு காமென் டிபியை உருவாக்கி அதை நூற்றுக்கும் அதிகமோனோர் இணைந்து வெளியிடும்படி செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

சூர்யா பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட காமென் டிபியில் ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்குவது உள்ளிட்ட உதவிகளும் இடம்பெறச் செய்து அசத்தியிருப்பது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும் #SuriyaBirthdayFestCDP, #SooraraiPottru ஆகிய ஹேஷ்டேக்குகளை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவரது ரசிகர்கள்.


தங்களுக்கு பிடித்த நடிகர்களின் பிறந்தநாளன்று அவர் நடித்த படங்களை மீண்டும் திரையிட்டு கொண்டாடுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றிருந்த ரசிகர்களை இணையத்தில் பிறந்தநாள் கொண்டாட வைத்துள்ளது இந்த கொரோனா பெருந்தொற்று.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading