ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரமாண்ட செட்டில் படமாக்கப்படும் சூர்யா-சிவாவின் சூர்யா 42!

பிரமாண்ட செட்டில் படமாக்கப்படும் சூர்யா-சிவாவின் சூர்யா 42!

சூர்யா 42

சூர்யா 42

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் 10 மொழிகளில் இரண்டு பாகங்களாக 3டி பீரியடிக் டிராமாவாக உருவாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எண்ணூர் துறைமுகத்தில் நடைப்பெற்று வருகிறது. 

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் இரண்டாம் ஷெட்யூல் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பாலிவுட் நடிகை திஷா பதானியும் இந்த ஷெட்யூலில் இடம்பெற்றிருக்கும் நிலையில், எண்ணூர் துறைமுகத்தில் பிரமாண்ட செட்டில் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் சமீபத்தில் இணைந்த சண்டை இயக்குநர் சுப்ரீம் சுந்தர் மாஸ்டரின் முன்னிலையில் படத்தின் ஒரு பெரிய ஸ்டண்ட் காட்சியை படமாக்கும் பணியில் படக்குழு மும்முரம் காட்டி வருகிறது. சுவாரஸ்யமாக, எச் வினோத் இயக்கத்தில் அஜித்தின் வரவிருக்கும் திரில்லர் படமான 'துணிவு' படத்திலும் அவர் சண்டைக் காட்சியை வடிவமைத்துள்ளார். தற்போதைய ஷெட்யூல் ஏறக்குறைய ஒரு மாதம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது.

150 கோடி சம்பளம்... விஜய்யின் தளபதி 68 படத்தின் ஹாட் அப்டேட்!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் 10 மொழிகளில் இரண்டு பாகங்களாக 3டி பீரியடிக் டிராமாவாக உருவாகிறது. அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில், சூர்யா 5 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் 2023-க்குள் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Suriya