• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா?

மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா?

சூர்யா - பாலா

சூர்யா - பாலா

பாலா இயக்கும் புதிய படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

  • Share this:
    நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.

    திரையுலகில் தத்தளித்துக் கொண்டிருந்த சூர்யாவுக்கு நந்தா படத்தின் மூலம் சரியான திசையை காட்டியவர் பாலா. நந்தாவுக்கு பிறகே சூர்யா என்ற நடிகர் தனித்தன்மையுடன் வெளிப்பட ஆரம்பித்தார். அதன் பிறகு பாலாவின் பிதாமகனில் நடித்தார். பாலா தயாரித்த மாயாவியிலும் சூர்யா நடித்தார்.

    இப்போது சூர்யாவின் முறை. அவன் இவன், தாரை தப்பட்டை என்று அடுத்தடுத்து சுமாரான படங்கள் தந்த பாலா நாச்சியார் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாலும், அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா பெரும் சறுக்கலாக அமைந்தது. வர்மாவை தயாரித்தவர்கள் மொத்தமாக பாலாவின் இயக்கத்தை நிராகரித்து, அதே கதையை வேறு இயக்குனரை வைத்து படமாக்கி வெளியிட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எந்த தமிழ்ப்பட இயக்குனருக்கும் இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை. அடுத்து பாலா என்னப் படம் இயக்குகிறார், யாரை இயக்குகிறார், பழைய பாலாவாக திரும்ப வருவாரா என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    பாலா இயக்கும் புதிய படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இதில் அதர்வா நடிப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், சூர்யாவே படத்தில் நடிப்பதாக உள்வட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சூர்யா, அதர்வா இருவரும் நடிக்கும் படமாக இது அமையவும் வாய்ப்புள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: