முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Suriya: ஆஸ்கர் அழைப்பை ஏற்ற சூர்யா... பொறுப்புணர்வை உணர்த்துவதாக முதல்வருக்கு பதில்!

Suriya: ஆஸ்கர் அழைப்பை ஏற்ற சூர்யா... பொறுப்புணர்வை உணர்த்துவதாக முதல்வருக்கு பதில்!

சூர்யா - மு.க.ஸ்டாலின்

சூர்யா - மு.க.ஸ்டாலின்

என்னை வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவரையும் பெருமைப்படுத்த எப்போதும் பாடுபடுவேன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆஸ்கர் குழுவின் அழைப்பை ஏற்பதாக ட்விட்டரில் தெரிவித்திருக்கும் நடிகர் சூர்யா, தன்னை வாழ்த்திய முதல்வருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகியப் படங்கள், ஆஸ்கர் விருதுப் போட்டியில் இடம்பெற்றன. ஆனால் இறுதிப் பட்டியலுக்கு முன்பாக ஆஸ்கரை விட்டு வெளியேறின. இதில் குறிப்பாக ஜெய்பீம் திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் சில காட்சிகளை ஆஸ்கர் தனது அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் சேனலில் பதிவேற்றியிருந்தது.

இந்நிலையில் வரும் 95-வது அகாடமி விருது விழாவின் குழு உறுப்பினராக சூர்யாவுக்கு அழைப்பு விடுத்திருந்தது ஆஸ்கர் அமைப்பு. இதையடுத்து அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைத் தொடர்ந்து, தற்போது ஆஸ்கர் அமைப்பின் அழைப்பை ஏற்ற சூர்யா, ”அழைப்பிற்கு நன்றி, இதை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். என்னை வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவரையும் பெருமைப்படுத்த எப்போதும் பாடுபடுவேன்!!” எனத் தெரிவித்துள்ளார்.

கணவர் வித்யாசாகருக்கு பிரியா விடை அளித்த நடிகை மீனா

அதோடு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து பதிலளித்திருக்கும் அவர், “தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளை தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Actor Suriya