ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபாஸ் இப்படி செய்வார்ன்னு நினைக்கல... சூர்யா சொன்ன சுவாரஸ்யம்!

பிரபாஸ் இப்படி செய்வார்ன்னு நினைக்கல... சூர்யா சொன்ன சுவாரஸ்யம்!

சூர்யா - பிரபாஸ்

சூர்யா - பிரபாஸ்

அம்மா தயாரித்த உணவை எனக்கு கொண்டு வந்தார். என் வாழ்நாளில் அவ்வளவு சுவையான பிரியாணி சாப்பிட்டதில்லை என்றார் சூர்யா.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சூர்யா தெலுங்கு நடிகர் பிரபாஸின் அம்மா சமைத்து தந்த பிரியாணியைப் போல் சுவையான பிரியாணியை இதுவரை ருசிக்கவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். 

நடிகர் சூர்யாவுக்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர் என்பதை சொல்லி தெரிய தேவையில்லை. அவர் 'கஜினி' படத்திலிருந்து தெலுங்கிலும் தனது ஒவ்வொரு படத்தையும் வெளியிட்டு வருகிறார். 'ஆகாசம் நீ ஹத்து ரா', 'ஜெய் பீம்' போன்ற படங்களின் மூலம் மீண்டும் நல்ல வரவேற்பை பெற்ற சூர்யா, அடுத்தடுத்து படங்களை தெலுங்கில் அறிவித்து வருகிறார்.

ஏசியாநெட் உடனான ஒரு நேர்காணலின் போது, பிரபாஸ் வீட்டில் சமைத்த உணவு குறித்து சூர்யா பகிர்ந்து கொண்டார். ”நான் ஷூட்டிங்கில் ஹைதராபாத்தில் இருந்தபோது,​​பிரபாஸ் என்னை அழைத்து இரவு உணவிற்கு அழைத்தார். நான் வருகிறேன் என்று சொன்னேன், ஆனால் எனது படப்பிடிப்பு இரண்டு மணி நேரம் தாமதமாகி விட்டது. மாலை 6 மணிக்கு தொடங்க இருந்த ஷூட்டிங், இரவு 8 மணிக்கு தொடங்கி இரவு 11:30 மணி வரை நீட்டிக்கப்பட்டது. நான் பிரபாஸை பிறகு சந்திக்கலாம் என்று நினைத்தேன், அப்போது அவரிடம் மன்னிப்பு கேட்கலாம் எனவும் திட்டமிட்டிருந்தேன். அன்று இரவு ஹோட்டல் உணவு அல்லது தயாரிப்பு நிறுவன மெஸ்ஸில் இருந்து சாப்பாடு வரும் என நினைத்தேன்.

இரவு 11.30 மணியளவில், ஹோட்டலின் தாழ்வாரத்தில் பிரபாஸ் எனக்காக சாப்பிடாமல் காத்துக்கொண்டிருந்தது அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் அம்மா தயாரித்த உணவை எனக்கு கொண்டு வந்தார். என் வாழ்நாளில் அவ்வளவு சுவையான பிரியாணி சாப்பிட்டதில்லை” என்றார் சூர்யா.

திவ்யா ஸ்ரீதருக்கு சர்ப்ரைஸ் வளைகாப்பு நடத்திய செவ்வந்தி சீரியல் டீம்!

தற்போது பிரபாஸ் இந்திய அளவில் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் பிஸியாக இருக்கிறார். 'பாகுபலி' படத்தின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற பிரபாஸுக்கு, பின்னர் வெளியான 'சாஹோ', 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. தற்போது இயக்குனர் பிரசாந்த் நீலின் 'சலார்' மற்றும் ஓம் ரவுத்தின் 'ஆதிபுருஷ்' ஆகிய படங்கள் மீது தான் அவரது நம்பிக்கைகள் அனைத்தும் இருக்கின்றன. மறுபுறம், நாக் அஸ்வினின் 'புராஜெக்ட் கே' மற்றும் மாருதியின் 'ராஜா டீலக்ஸ்' ஆகியவற்றிலும் நடித்து வருகிறார் பிரபாஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Suriya, Tamil Cinema