Home /News /entertainment /

சூர்யா - 42 படத்தின் தலைப்பு என்ன? வெளியானது சூப்பர் அப்டேட்!

சூர்யா - 42 படத்தின் தலைப்பு என்ன? வெளியானது சூப்பர் அப்டேட்!

சிவா - சூர்யா

சிவா - சூர்யா

சூர்யா நடிக்கும் 42வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 13ஆம் தேதி தொடங்குகிறது.  

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சூர்யா நடிக்கும் 42-வது திரைப்படத்திற்கான தலைப்பு நாளை காலை 10 மணிக்கு அறிவிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. அதை  தொடர்ந்து படப்பிடிப்பையும் தொடங்கினர்.

வரலாற்று பின்னணியில் உருவாகும் அந்த திரைப்படத்திற்கான முதல் ஐந்து நாள் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அதன் பிறகு சூர்யா ஓய்வில் இருந்தார். அதே சமயம் இயக்குனர் சிவா அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் சூர்யா 42 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் வரும் 13ம் தேதி தொடங்குகிறது.  அங்கு பிரம்மாண்டமான சண்டை காட்சியை படமாக்க இயக்குனர் சிவா திட்டமிட்டு இருக்கிறார்.

அதில் சுமார் 250 Bouncer-கள் பங்குபெறும் காட்சி படமாக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது.  சூர்யா - சிவா இணைந்திருக்கும் இந்த திரைப்படத்திற்கான தலைப்பு நாளை காலை 10 மணிக்கு அறிவிக்க உள்ளனர்.

Also read... கமல் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய சிம்பு!

இந்த திரைப்படத்தின் மீது சூர்யா ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.  அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இருக்கும் என பட குழுவினர் கூறுகின்றனர்.

இந்த திரைப்படத்தில் திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். அதே போல் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Suriya

அடுத்த செய்தி