Home /News /entertainment /

வரவேற்பைப் பெறும் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்…. ஒரே நாளில் 25 லட்சம் வியூசை தாண்டியது

வரவேற்பைப் பெறும் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்…. ஒரே நாளில் 25 லட்சம் வியூசை தாண்டியது

சூர்யா 42

சூர்யா 42

சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்படவுள்ள இந்த திரைப்படத்தை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சூர்யா - இயக்குனர் சிவா காம்போவில் உருவாகி வரும், சூர்யா 42 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது. போஸ்டர் வெளியான 24 மணி நேரத்தில் 25 லட்சம் பார்வையை யூட்யூபில் கடந்துள்ளது.

    மோஷன் போஸ்டர் பின்னணி இசை சிறப்பாக உள்ளதென ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சூர்யா தற்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், சிவா இயக்கத்தில் தனது 42 ஆவது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

    இவைகளில் சிவா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முதலில் முடிக்க சூர்யா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையான திஷழ பதானி நடிக்கிறார்.

    பொன்னியின் செல்வன் டிஜிட்டல் வெளியீட்டு உரிமம் மிகப்பெரும் தொகைக்கு விற்பனை… எத்தனை கோடிகள் தெரியுமா?

    சூர்யா 42 படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படம் மொத்தம் 10 மொழிகளில் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

    இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியானது. இந்த போஸ்டர் மிரட்டலாக உள்ளது என்றும், பின்னணி இசை பிரம்மாண்டமாக இருப்பதாகவும் சூர்யாவின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



    வரலாற்றுப் படமாக இந்த திரைப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா 42 படத்தில் கதாசிரியராக ஆதி நாராயணா, இசையமைப்பாளராக தேவிஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி, எடிட்டராக நிஷாத் யூசுஃப் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்படவுள்ள இந்த திரைப்படத்தை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி