’சூர்யா 40’ அல்லது ‘வாடிவாசல்’? காளையுடன் படப்பிடிப்பு தளத்தில் சூர்யா - வீடியோ

’சூர்யா 40’ அல்லது ‘வாடிவாசல்’? காளையுடன் படப்பிடிப்பு தளத்தில் சூர்யா - வீடியோ

சூர்யா

சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு பள்ளியின் துவக்க விழாவில் மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் கொரோனாவுக்கு பிறகு முதல் முறையாக பொதுவெளியில் காணப்பட்டார்.

 • Share this:
  காளையுடன் நடிகர் சூர்யா படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

  தமிழ் சினிமாவில் மிகவும் அர்ப்பணிப்புள்ள நடிகர்களில் ஒருவரான சூர்யா, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய 'சூரரைப் போற்று’ படத்தை தயாரித்து நடித்தார். அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிய இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

  Sivaangi: சிவாங்கியா இது? லைக்ஸை குவிக்கும் குடும்பப் படம்!

  பிப்ரவரி 9-ஆம் தேதி நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைப் பெற்று வந்த அவர் குணமானார். சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு பள்ளியின் துவக்க விழாவில் மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் கொரோனாவுக்கு பிறகு முதல் முறையாக பொதுவெளியில் காணப்பட்டார்.  மார்ச் 15-ம் தேதியான இன்று முதல் 'சூர்யா 40' படத்தில் இணைகிறார் உள்ளார். இதற்கு முன்னதாக அவரது வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில் நீண்ட முடியுடன் கம்பீரமாக தோற்றமளிக்கிறார் சூர்யா.

  வீடியோவில் சூர்யா ஒரு பெரிய காளைக்கு அருகில் நிற்கிறார். அப்போது ஒரு புகைப்படக்காரர் புகைப்படம் எடுக்கிறார். இந்த வீடியோ 'சூர்யா 40' படத்திற்காக எடுக்கப்பட்டதா அல்லது வெற்றிமாறன் இயக்கும் ’வாடி வாசல்’ படத்துக்கான ஃபோட்டோஷூட்டா எனத் தெரியவில்லை.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: