• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூர்யா 39 படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

சூர்யா 39 படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

சூர்யா 39 திரைப்படத்தின் இயக்குநர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதில் ப்ரியங்கா மோகன், பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, ஜெயப்பிரகாஷ், உள்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்துக்கு முன் சூர்யா வழக்கறிஞராக ஒரு படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்புதளத்தில் சூர்யா இருக்கும் புகைப்படமும் வெளியானது. சூர்யா 39 என குறிப்பிடப்படும் இந்தப் படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும் சில தகவல்கள் கசிந்துள்ளன.



2017-இல் கூட்டத்தில் ஒருத்தன் என்ற படம் வெளியானது. அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் நடித்த இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்திருந்தது. இவர் சூர்யாவின் நெருங்கிய உறவினர். இந்தப் படத்தை இயக்கியவர் டி.ஜே.ஞானவேல். இவர்தான் சூர்யா 39 படத்தை இயக்குவதாகவும், இதில் சூர்யா வழக்கறிஞராக கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பதாகவும் தகவல் உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: