ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகர் அப்பாஸிற்கு அறுவை சிகிச்சை… விரைவில் வீடு திரும்புவேன் என ஃபேஸ்புக்கில் பதிவு…

நடிகர் அப்பாஸிற்கு அறுவை சிகிச்சை… விரைவில் வீடு திரும்புவேன் என ஃபேஸ்புக்கில் பதிவு…

அறுவை சிகிச்சைக்கு பின்னர் நடிகர் அப்பாஸ்

அறுவை சிகிச்சைக்கு பின்னர் நடிகர் அப்பாஸ்

மருத்துவமனையில் அப்பாஸ் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியுடன் அவரது முகநூல் பக்கத்தில் கமென்ட் செய்து வந்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் அப்பாஸிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் தான் வீடு திரும்புவேன் என்று ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டிருக்கிறார்.

  தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் அப்பாஸ். 1996-ல் வெளிவந்த காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமானார். அஜித், ஐஸ்வர்யா ராயுடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ரஜினியுடன் படையப்பா உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. மம்முட்டி, முரளி நடித்த ஆனந்தம் திரைப்படத்திலும் அப்பாஸின் கேரக்டர் பேசப்பட்டது.

  கடைசியாக மாதவனுடன் இணைந்து நடித்த மின்னலே திரைப்படம் வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் அவர் ஆஸ்திரேலியாவில் சாஃப்ட்வேர் பணியாளராக இருந்து வருகிறார்.

  பெற்றோரை இழந்த சிறுமியின் கனவை நனவாக்கிய ரோஜா... உண்மையான தாய் என நெட்டிசன்கள் பாராட்டு!

  கொரோனா காலத்தில் அப்பாஸ் வெளியிட்ட வீடியோக்கள் கவனம் ஈர்த்தன. இந்த நிலையில் அவரது காலில் கடந்த மாதம் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

  ’வாரிசு’ பட நடிகை ராஷ்மிகாவின் கவனம் பெறும் படங்கள்..!

  மருத்துவமனையில் அவர் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியுடன் அவரது முகநூல் பக்கத்தில் கமென்ட் செய்து வந்தனர். இந்த நிலையில் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்திருப்பதாகவும், விரைவில் தான் வீடு திரும்புவேன் என்றும் அப்பாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  அவர் தனது ஸ்டேட்டஸில், ‘மருத்துவமனையில் இருக்கும்போது எனக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது. அதனை நான் சமாளித்துக் கொண்டேன். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. விரைவில் வீட்டிற்கு திரும்புகிறேன். உங்களது அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood