Suresh Raina: பயோபிக்கில் நடிக்க தென்னிந்திய நடிகர்களை 'டிக்’ செய்து, பாலிவுட் நடிகர்களை தவிர்த்த சுரேஷ் ரெய்னா!

சுரேஷ் ரெய்னா

சென்னை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

  • Share this:
    கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் இப்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன. தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    அதில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியாகவே வாழ்ந்ததை நம்மால் மறக்க முடியாது. தோனியின் வாழ்க்கை வரலாற்றில் அவருக்கு பதிலாக வேறு எந்த நடிகரையும் நினைத்துப் பார்க்க முடியாது. இந்நிலையில் தற்போது ரெய்னா ஒரு நேர்காணலில், தனது வாழ்க்கை வரலாற்றில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவின் பிலிவ் புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனால் பல இன்ஸ்டாகிராம் நேரடி அமர்வுகளில் அவர் கலந்துகொண்டு தனது புத்தகத்தை ப்ரோமோட் செய்து வருகிறார். அந்த வகையில் பாவனா பாலகிருஷ்ணனுடன் கலந்துக் கொண்ட நேர்காணலில் தனது வாழ்க்கை வரலாற்றில், நடிக்கக்கூடிய ஹீரோக்கள் பற்றி விவாதித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவரது வாழ்க்கை வரலாற்றில் யாரால் நடிக்க முடியும் என்று கேட்டபோது, தெற்கில் இருந்து சில நடிகர்களால் முடியும் என்று கூறினார். "நாட்டிற்காக அல்லது சிஎஸ்கே-க்காக விளையாடுவது எளிதானது அல்ல, ஏனெனில் அந்த உணர்வை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய ஒருவரை நான் விரும்புகிறேன். தெற்கிலிருப்பவர்களால் உண்மையிலேயே அதைச் செய்ய முடியும். ஆகவே சென்னை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். என் மனதில் இரண்டு மூன்று பெயர்கள் உள்ளன" என்றார்.

    அந்த நடிகர்களின் பெயர்களைப் பற்றி கேட்டபோது, "எனக்கு பிடித்த சூர்யாவால் நடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன், அவரும் ஒரு கிரிக்கெட் ரசிகர். துல்கர் சல்மான் நடிப்பு நன்றாக இருக்கிறது" என்று கூறினார்.

    தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதால், ரெய்னாவின் ரசிகர்கள் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: