• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அண்ணாத்த, வலிமை, பீஸ்ட்... சுரேஷ் ரெய்னா தமிழில் ட்வீட்!

அண்ணாத்த, வலிமை, பீஸ்ட்... சுரேஷ் ரெய்னா தமிழில் ட்வீட்!

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

”Friendship ட்ரைலர், டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு. படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கப்போகுது”

  • Share this:
    ஹர்பஜன் சிங்கின் ‘ஃப்ரெண்ட்ஷிப்’ படத்துக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரித்திருக்கும் திரைப்படம் ஃப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் பிக் பாஸ் லாஸ்லியா, நடிகர் அர்ஜுன், நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இந்தப் படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தினாலும், திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் வெளியீட்டு எண்ணத்தை மாற்றிய படக்குழு, படத்தை செப்டம்பர் 17-ம் தேதி 'பிரண்ட்ஷிப்' படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இந்நிலையில் படத்தை ப்ரொமோட் பண்ணும் விதமாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தமிழில் ட்வீட் செய்துள்ளார். ”பஜ்ஜி பா ஹர்பஜன் சிங் என் அண்ணாத்த! #Friendship ட்ரைலர், டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு. படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கப்போகுது. #FriendshipMovie டீம்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களே நீங்க எல்லாரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: