Home /News /entertainment /

மோகன்லாலின் ப்ரோ டாடி படத்தின் ரீமேக்கில் பிரபல நடிகர்...?

மோகன்லாலின் ப்ரோ டாடி படத்தின் ரீமேக்கில் பிரபல நடிகர்...?

ப்ரோ டாடி

ப்ரோ டாடி

Bro Daddy: நேரடியாக ஓடிடியில் வெளியான இந்தப் படத்தில் மோகன்லால், மீனா, பிரித்திவிராஜ், கல்யாணி பிரியதர்ஷன், கனிகா, லாலு அலெக்ஸ், ஜெகதீஷ் உட்பட பலர் நடித்திருந்தனர்.

  • News18
  • Last Updated :
பிருதிவிராஜ் இயக்கத்தில் வெளியான ப்ரோ டாடி திரைப்படம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நேரடியாக ஓடிடியில் வெளியான இந்தப் படத்தில் மோகன்லால், மீனா, பிரித்திவிராஜ், கல்யாணி பிரியதர்ஷன், கனிகா, லாலு அலெக்ஸ், ஜெகதீஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். நகைச்சுவையுடன் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி குறுகிய காலத்தில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் மற்றும் ராணா நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெங்கடேஷ் இதற்கு முன் மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மோகன்லால் நடித்த வேடத்தில் நடித்திருந்தார். த்ரிஷ்யம் இரண்டாம் பாகத்திலும் அவரே நடித்திருந்தார். அதேபோல் அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் வெங்கடேஷ் நடித்திருந்தார்.

இந்தப் படங்கள் நேரடி தெலுங்குப் படங்களை விட அதிக பாராட்டையும், புகழையும் அவருக்கு பெற்றுத் தந்தன. ப்ரோ டாடியில் மோகன்லால் நடித்த அப்பா வேடத்தில் வெங்கடேஷும், பிரித்திவிராஜ் நடித்த மகன் வேடத்தில் ராணாவும் நடிக்கலாம் என்கின்றன செய்திகள்.

Also read... எதற்கும் துணிந்தவன் படத்தின் அட்டகாசமான புகைப்படங்கள்...!
மலையாளத்தில் தயாராகும் படங்கள் தற்போது பெருமளவு தெலுங்கிலும், இந்தியிலும் ரீமேக் செய்யப்படுகின்றன. மோகன்லாலின் லூசிபர் திரைப்படம் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பிரித்திவிராஜ் நடித்த ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் பீம்ல நாயக் என்ற பெயரில் தெலுங்கில் பவன் கல்யாண், ராணா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அப்படம் திரைக்கு வருகிறது.


இவை தவிர பிரிதிவிராஜ், சுராஜ் வெஞ்சாரமூடு நடித்த டிரைவிங் லைசன்ஸ் திரைப்படத்தையும் தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. அந்தப் பட்டியலில் இப்போது ப்ரோ டாடியும் இணைந்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Mohanlal

அடுத்த செய்தி