ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு படத்தில் 32 நொடிகளில் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி... துவம்சம் பண்ணிய அஜித் - சீக்ரெட் சொன்ன பிரபலம்

துணிவு படத்தில் 32 நொடிகளில் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி... துவம்சம் பண்ணிய அஜித் - சீக்ரெட் சொன்ன பிரபலம்

'துணிவு' அஜித் குமார்

'துணிவு' அஜித் குமார்

சிறிது தவறினாலும் அந்தக் சண்டைக்காட்சியை மீண்டும் படமாக்க வேண்டும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

துணிவு படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் வேடத்தில் நடித்துள்ளதாக அப்பட இயக்குநர் வினோத் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுவாக அஜித் படங்களில் சண்டைக் காட்சிகள் அனல் பறக்கும் வகையில் இருக்கும். அதற்கேற்ப இப்படத்தின் சண்டை பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் இப்படத்தில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் தொடர்பாக சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில், 360 டிகிரி ஸ்டண்ட் டெக்னிக்கை கொண்டு 32 விநாடிகளில் ஒரே டேக்கில் நடிகர் அஜித்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிறிது தவறினாலும் அந்தக் சண்டைக்காட்சியை மீண்டும் படமாக்க வேண்டும், முதல் சில டேக்குகள் சரியாக வரவில்லை, 13வது டேக்கில் சரியாக படமாக்கப்பட்டது. நடிகர் மிகச்சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார் எனவும் அவர் தெரிவித்தார்.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியர் சிபி, பாவனி, அமீர், பக்ஸ் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும்,

ஜிப்ரான் இசையில் இப்படத்திலிருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா என 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.

துணிவு படத்துக்காக அஜித் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்


First published:

Tags: Actor Ajith, Thunivu