KS Ravikumar: கே.எஸ்.ரவிக்குமாரை கைவிட்ட உச்ச நடிகர்கள்!

KS Ravikumar: கே.எஸ்.ரவிக்குமாரை கைவிட்ட உச்ச நடிகர்கள்!

கே.எஸ்.ரவிகுமார்

கே.எஸ்.ரவிக்குமார் என்ற பெயர் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தது. ரஜினிக்கு ஒரு படம், அடுத்து கமலுக்கு ஒரு படம் என்று தமிழின் இருபெரும் சூப்பர் ஸ்டார்களை வைத்தே பல படங்கள் இயக்கினார்.

  • Share this:
    கே.எஸ்.ரவிக்குமார் என்ற பெயர் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தது. ரஜினிக்கு ஒரு படம், அடுத்து கமலுக்கு ஒரு படம் என்று தமிழின் இருபெரும் சூப்பர் ஸ்டார்களை வைத்தே பல படங்கள் இயக்கினார்.

    பெரும்பாலான எல்லா படங்களுமே ஹிட். ரஜினியின் லிங்கா கூட மிகப்பெரிய வசூலை பெற்றது. படத்தை தயாரித்தவர்களே லிங்காவை வெளியிட்டிருந்தால் லாபம் கிடைத்திருக்கும். மாறாக பல கைகள் மாறி படம் திரையரங்குக்கு வந்த போது படத்தின் விலை, பல மடங்கு உயர்ந்து, அது ஒரு சிலருக்கு நஷ்டத்தை கொடுத்தது.

    இதற்கிடையே லிங்கா, கோச்சடையான் என்று ரஜினியின் மார்க்கெட் ஊசலாடி, அவர் கபாலி, காலா என்று திசை மாறிய பின் கே.எஸ்.ரவிக்குமாரை கண்டு கொள்ளவில்லை. அதேபோல் தான் கமலும். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டு, அவரது கால்ஷீட்டுக்காக பல வருடங்கள் கே.எஸ்.ரவிக்குமார் காத்திருந்தார். சிரஞ்சீவியும் கடைசியில் கை கழுவினார்.

    முன்னணி நடிகர்களின் பாராமுகம் காரணமாக இயக்கத்தைவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார் கே.எஸ்.ரவிக்குமார். அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதில் திரைப்படம் விரைவில் ஓடிடி-யில் வெளியாகிறது. மித்ரன் ஆர்.ஜவஹர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நேர்மைக்காக போராடும் ஒரு தகப்பனின் கதை மதில் என்று சொல்லும் கே.எஸ்.ரவிக்குமார், ரஜினி, கமலை இயக்கும் கனவை இன்னும் விடவில்லை. அவர்களுக்கான கதை என்னிடம் இருக்கிறது என்கிறார் இப்போதும். சம்பந்தப்பட்ட இருவரும் கால்ஷீட் தராததுதான் இப்போது பிரச்சனையே.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: