ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அடுத்தடுத்து படங்கள்... மீண்டும் பாய்ச்சலுக்கு தயாராகும் சூப்பர் ஸ்டார் ரஜினி

அடுத்தடுத்து படங்கள்... மீண்டும் பாய்ச்சலுக்கு தயாராகும் சூப்பர் ஸ்டார் ரஜினி

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

Rajinikanth | ரஜினிகாந்தின் 170 to 171 படங்களின் திட்டம். சினிமாவில் இருந்து விலகுகிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தொடர்ந்து சினிமாவில் நடிப்பது உறுதியானது.  அவர் நடிக்கும் அடுத்த இரண்டு படங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் வியாபாரத்தை மாநிலம் கடந்து உலக அளவில் பிரபலப்படுத்திய பெருமை இவரையே சாரும்.73 வயதாகும் நடிகர் ரஜினிகாந்த், சினிமாவில் இன்றும் நாயகனாக நடித்து வருகிறார். அத்துடன் அவருடைய திரைப்படத்திற்கான வியாபாரமும் பல நூறு கோடியில் உள்ளது.

சினிமா துறையில் பலராலும் நிகழ்த்த முடியாத சாதனைகளை 73 வயதிலும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் செய்து வருகிறார் ரஜினிகாந்த். இதை மிகப் பெரிய சாதனையாக ரசிகர்களும், சினிமா துறையினரும் கொண்டாடுகின்றனர்.

ரஜினிகாந்த்துக்கு உடல் நிலையில் சில பிரச்சனைகள் இருந்தாலும், இன்றும் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக அவரின் நடை, வேகம், பேச்சு , ஸ்டையில் என எதுவும் இன்னும் மாறாமல் உள்ளது.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் தனது 169-வது படமான ஜெயிலரில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 170 வது படத்துடன் திரைப்படம் நடிப்பதிலிருந்து ஓய்வு பெறுவார் என்ற ஒரு தகவல் உலாவி வந்தது.  அதற்கு தற்போது அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

Read More: தனுஷ் இயக்கப் போகும் 2ஆவது படம்… பக்கா ப்ளானில் படக்குழு… ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்

 நடிகர் ரஜினிகாந்த் லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதற்காக லைகா நிறுவனத்தை சேர்ந்த தமிழ் குமரன் ரஜினிகாந்தை சந்தித்து பேசி இறுதி செய்தார்.  மேலும் அந்த இரண்டு படங்களுக்கான பூஜை வரும் நவம்பர் 5ஆம் தேதி காலை சென்னையில் நடைபெறுகிறது. அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லைகா சுபாஸ்கரன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

இந்த இரண்டு படங்களுக்காக ரஜினிகாந்திற்கு 300 கோடி ரூபாய் மற்றும் வரி ஆகியவை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

ரஜினிகாந்தின் அடுத்த படங்களுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், அந்தப் படங்களை யார் இயக்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஆனால் சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், எச்.வினோத் அட்லி, லோகேஷ் கனகராஜ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கதை கூறியிருக்கின்றனர்.  இதிலிருந்து இரண்டு இயக்குனர்களை அவர் தேர்வு செய்துள்ளார் என கூறப்படுகிறது.

ரஜினிகாந்தின் இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அத்துடன் ரஜினிகாந்த் சினிமாவிற்கு Good Bye சொல்கிறார் என்ற செய்தியும் பொய்யாகி உள்ளது.

Read more: துணிவு VS வாரிசு... 8 ஆண்டுகளுக்கு பின் திரையரங்கில் மோதும் அஜித்- விஜய் படங்கள்

அதில் 170வது மற்றும் 172வது படங்களை லைகா தயாரிப்பிலும், 171வது படத்தை தாணு தயாரிப்பிலும் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் எனவும் தகவல் உள்ளது.

இந்தப் படங்கள் மட்டுமல்லாமல் மேலும் சில படங்களிலும் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது.

Published by:Srilekha A
First published:

Tags: Rajinikanth, Rajinikanth Fans