ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ள லி மஸ்க் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த்!

ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ள லி மஸ்க் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.ரஹ்மான்

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, லால் சலாம் படத்திற்காக ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய லி மஸ்க் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டுகளித்துள்ளார்.

நீண்ட நாட்களாக திரையுலகில் இருந்தும் தனது உற்சாகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர். தனது பிஸியான ஷெட்யூலிலும் சிறந்த படங்களைப் பார்ப்பதும், அதன் இயக்குநர்களை நேரில் அழைத்துப் பாராட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இயக்கியுள்ள லி மஸ்க் படத்தைப் பார்த்துள்ளார் ரஜினி. ஏ.ஆர்.ரஹ்மான் தனது விர்ச்சுவல் ரியாலிட்டி படமான லி மஸ்க்கின் சிறப்பு காட்சியை சூப்பர் ஸ்டாருக்காக திரையிட்டுள்ளார். விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியுடன் படத்தை ரசித்த ரஜினியின் படத்தை இன்ஸ்டகிராமில் பதிவிட்டு, “படத்தை யார் பார்க்கிறார்கள் பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார் ரஹ்மான்.




 




View this post on Instagram





 

A post shared by ARR (@arrahman)



வாழ்நாள் முழுவதும் இப்படித்தான்... தீவிர நோயால் பாதிக்கப்பட்ட பூனம் கவுர்

இதற்கிடையில், சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளும் திரைப்பட இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சூப்பர் ஸ்டார் மற்றும் ஏ.ஆர் ரஹ்மானுடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட இரண்டு அழகான படங்களைப் பகிர்ந்துள்ளார். "இரண்டு அற்புதமான மனிதர்கள் சந்திக்க நீங்கள் தான் காரணம் என்றால், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் சிறந்தவர்கள்” என அதற்கு தலைப்பிட்டிருக்கிறார்.


தவிர, நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்தப் படமான லால் சலாம் படத்திலும் அவர் நீண்ட கேமியோ தோற்றத்தில் நடிக்கிறார்.

மறுபுறம், ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, லால் சலாம் படத்திற்காக ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்துள்ளார். அதோடு பொன்னியின் செல்வன் II, அயலான், மாமன்னன், மலையாள திரைப்படம் ஆடுஜீவிதம் உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: AR Rahman, Rajinikanth