நடிகர் ரஜினிகாந்துக்கு நியூஸ்18 குழுமம் சார்பில் அம்ரித் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
ரஜினி.. இந்த மூன்றெழுத்துக்கு ரசிகர்களிடம் இருக்கும் வசீகரம், காலம் கடந்து இன்றும் துளியும் குறையவில்லை. ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிக்கிடந்த தமிழ் சினிமாவின் வணிக எல்லையை, உலகளவில் விரிவுபடுத்தியதில் ரஜினி படங்களுக்கு பெரும்பங்குண்டு.
குறிப்பாக கருப்பு வெள்ளை காலத்தில் களம் கண்ட ரஜினி, ஈஸ்ட்மென் கலர், டிஜிட்டல், அனிமேஷன், 3டி என நான்கு வெவ்வேறு தொழில்நுட்பத்திலும் நடித்துவிட்டார். இது இந்திய அளவில் வேறெந்த நடிகருக்கும் கிடைக்காத மிகப்பெரிய கௌரவம்.
ஒரு பக்கம் வசூல் சாதனைகள் என்றால் இன்னொரு பக்கம் கலைமாமணி தொடங்கி பத்மவிபூஷன் வரை எண்ணற்ற உயரிய விருதுகளையும் ரஜினிகாந்த் கைப்பற்றியுள்ளார். 1978-ல் முதல்முறையாக ’முள்ளும் மலரும்’ படத்திற்காக தமிழக அரசின் சிறப்பு விருதை பெற்ற ரஜினிகாந்த், தொடர்ந்து ’மூன்று முகம்’, ’முத்து’, ’படையப்பா’, ’சந்திரமுகி’, ’சிவாஜி’ என 6 முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அதோடு இந்திய அரசால் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை கடந்த வருடம் பெற்றார் ரஜினிகாந்த்.
நிச்சயதார்த்தம் நடந்து இரண்டரை ஆண்டுகள்... விஜயகாந்த் மகனின் திருமணம் ஏன் இன்னும் நடக்கவில்லை?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் தற்போது அவருக்கு (நெட்வொர்க் 18) நியூஸ் 18 குழுமம் சார்பில், அம்ரித் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைப்பெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் சார்பாக, அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.