Home /News /entertainment /

முதல்வர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி

முதல்வர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் நலமுடன் வாழ வேண்டும் என, கோயில்களில் பிரார்த்தனை நடத்தினர்.

    தனக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்ற அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

    கடந்த 46 ஆண்டுகளாக தனது நடிப்பாலும், ஸ்டைலாலும் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். நாடு கடந்து விரிந்துள்ளது இவரது ரசிகர் பட்டாளம். தற்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் வசப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு ரஜினி படம் வெளியாகும் போதும் அதனை திருவிழா போல கொண்டாடுவார்கள் ரசிகர்கள்.

    இந்நிலையில் நேற்று ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையடுத்து இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம், ஜி.கே.வாசன், திருநாவுக்கரசர், தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இசைஞானி இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து, அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.





    மேலும் படிக்க - ஆண்களை அவமானப்படுத்துகிறதா சமந்தா பாடல்? கிளம்பும் எதிர்ப்பு...

    அதோடு ரஜினியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் நலமுடன் வாழ வேண்டும் என, கோயில்களில் பிரார்த்தனை நடத்தினர். இந்நிலையில் தனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி