ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''நல்லாதான் போய்ட்டு இருக்கு'' - செய்தியாளர்களுக்கு ஜெயிலர் அப்டேட் வழங்கிய ரஜினிகாந்த்

''நல்லாதான் போய்ட்டு இருக்கு'' - செய்தியாளர்களுக்கு ஜெயிலர் அப்டேட் வழங்கிய ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ஜெயிலர் படத்தின் மூலம் நான் தான் எப்பொழுதும் சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினிகாந்த் நிரூபிப்பார் என அவரது ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கிய 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்தத் தகவல் படக்குழுவினரால் உறுதிபடுத்தப்படவில்லை.

ஏற்கனவே இதன் படப்பிடிப்பு 50% அளவிற்கு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நெல்சனின் முந்தைய படங்களை விட ஜெயிலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். அப்போது ஜெயிலர் படப்பிடிப்பு எவ்வாறு போய்க்கொண்டிருக்கிறது? என பத்திரிக்கையாளர் கேட்டதற்கு, ''நன்றாக போய் கொண்டிருக்கிறது'' என கூறிச் சென்றார்.

பீஸ்ட் படம் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை என்பதால் இந்தப் படத்தின் உருவாக்கத்தில் இயக்குநர் நெல்சன் கூடுதல் கவனம் செலுத்திவருகிறார். அதுபோலவே அண்ணாத்த படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. கூடவே பத்திரிகையாளர் பிஸ்மி, விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார் என கொளுத்திப்போட இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டனர். ஜெயிலர் படத்தின் மூலம் நான் தான் எப்பொழுதும் சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினிகாந்த் நிரூபிப்பார் என அவரது ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

முன்னதாக தனது ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். சுதாகரின் இறுதிச்சடங்கில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

First published:

Tags: Mohanlal, Rajinikanth