Home /News /entertainment /

பார்த்திபன்... வித்தியாச முயற்சிகளை செய்ய துடிக்குற கலை ரசிகன் - ரஜினிகாந்த் பாராட்டு!

பார்த்திபன்... வித்தியாச முயற்சிகளை செய்ய துடிக்குற கலை ரசிகன் - ரஜினிகாந்த் பாராட்டு!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

பார்த்திபனின் வித்தியாச முயற்சிகள் எப்போதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்.

    பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இதில் பார்த்திபனுடன் இணைந்து வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இரவின் நிழல் திரைப்படம் பெற்றுள்ளது. அகிரா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படம் வரும் 15-ம் தேதி வெளியாகிறது. பார்த்திபனின் வித்தியாச முயற்சிகள் எப்போதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும். அதேபோல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள இரவின் நிழல் திரைப்படமும், பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    என் உடல்நிலை குறித்த வதந்திகளை ரசித்தேன் - நடிகர் விக்ரம்!



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் இரவின் நிழல் படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். படத்தின் ப்ரோமோ வீடியோவில் பேசியுள்ள ரஜினி, “பார்த்திபன் எப்போதும் வித்தியாசமான முயற்சிகள் செய்யணும்ன்னு துடிக்குற ஒரு கலை ரசிகன். நான் லீனியர் சிங்கிள் ஷாட் - உலகத்துலயே யாரும் இதுவரைக்கும் எடுத்தது கிடையாது. 29 நிமிஷம் இந்தப் படத்தை எப்படி எடுத்தாங்கன்னு காட்டினாங்க, புல்லரிக்குது. இந்தப் படம் நிச்சயம் ரொம்ப நல்லா போகும்” என்று பாராட்டியுள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி