முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சென்னையில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படப்பிடிப்பு தொடக்கம்!

சென்னையில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படப்பிடிப்பு தொடக்கம்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

காலா, பேட்ட, தர்பார், அண்ணாத்த படங்களின் சூட்டிங் வெளி மாநிலங்களில் தொடங்கிய நிலையில் ஜெயிலர் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு ராயப்பேட்டையில் தொடங்கியது.

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்தப் படத்திற்கான கதை விவாத உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்தன.

அந்த வேலைகளை முடித்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார் ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டார். ஆனால் ஒரு சில காரணங்களால் படம் இரண்டு வாரம் தள்ளி சென்றது. இந்த நிலையில் இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. காவல் நிலைய செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதில் ரஜினிகாந்த் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்!

அந்த காவல் நிலைய செட்டில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகின்றன. அதை முடித்த பிறகு ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கு முன் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த, தர்பார், பேட்ட உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு வெளி மாநிலங்களில் தொடங்கியது. இந்த நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Anirudh, Rajinikanth