ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Jailer: மாஸாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... வெளியானது ஜெயிலர் க்ளிம்ப்ஸ்!

Jailer: மாஸாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... வெளியானது ஜெயிலர் க்ளிம்ப்ஸ்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் மாஸான காட்சிகள் அதில் இடம் பிடித்துள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரஜினியின் ஜெயிலர் படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

  அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவருடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் 'ஜெயிலர்' படத்தின் நட்சத்திர நடிகர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  அதே நேரத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தமன்னா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் கேமராவை கவனிக்கிறார்.

  இந்தப் படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி படப்பிடிப்பு துவங்கியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. சென்னை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் எண்ணூர் ஆகியப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

  எப்படி இருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன்?

  எப்படி இருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன்?

  எப்படி இருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன்?

  இதற்கிடையே நேற்று ஜெயிலர் படப்பிடிப்பில் நடிகர் சிவராஜ்குமார் இணைந்திருப்பதாக அப்டேட் வெளியிட்டது சன் பிக்சர்ஸ். இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் மாஸான காட்சிகள் அதில் இடம் பிடித்துள்ளன. அதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Rajinikanth, Tamil Cinema