Superstar Rajinikanth Isaignani Ilayaraja: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், இசைஞானி இளையராஜாவும் 28 வருடங்கள் கழித்து மீண்டும் இணைவதாக தகவல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சமீபத்திய திரைப்படமான 'அண்ணாத்த' கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, பாண்டியராஜா, லிவிங்ஸ்டன், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினி அடுத்து யாரின் படத்தில் நடிப்பார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதில் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ், வெங்கட் பிரபு மற்றும் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரில் யாரேனும் தான் ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்குவார்கள் என்ற பேச்சும் வலம் வருகிறது.
இதற்கிடையில், பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் ஆர்.பால்கி சமீபத்தில் ரஜினியை சந்தித்து ஒரு கதையை கூறியதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதம் தனது 71 வயதை எட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த பான் இந்தியன் படத்தில் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும், அனைத்தும் சரியாக நடந்தால் இந்தப் படம் 'தலைவர் 169' ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழரான ஆர்.பால்கி, அமிதாப் பச்சனின் 'சீனி கம்', 'பா' மற்றும் 'ஷமிதாப்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். அக்ஷய் குமாருடன் 'பேட்மேன்' மற்றும் 'மிஷன் மங்கள்' படங்களிலும் பணிபுரிந்துள்ளார். தற்போது துல்கர் சல்மான் நடித்துள்ள 'சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்' படத்தை இயக்கி வருகிறார். 'ராஞ்சனா' படத்திற்குப் பிறகு இந்தியில் தனுஷ் நடித்த இரண்டாவது படமான 'ஷமிதாப்' படத்தின் இயக்குநரும் இவரே.
இதையும் படிங்க - குழந்தைகளுக்கு பொம்மைகள் பரிசளித்த கனடா வாழ் விஜய் ரசிகர்கள்!
ஆர்.பால்கி, ரஜினியை வைத்து இயக்கும் படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் - இளையராஜா இணையும் படம் இதுவாகவிருக்கும். இவர்கள் கடைசியாக 1994-ம் ஆண்டு வெளியான ‘வீரா’ படத்தில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ilaiyaraja, Ilayaraja, Music director ilayaraja, Rajinikanth, Tamil Cinema