ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உற்சாக நடைபோட்ட ரஜினி.. ஓடிவந்து வரவேற்ற அமைச்சர்.. பெங்களூரு சென்ற சூப்பர் ஸ்டார்!

உற்சாக நடைபோட்ட ரஜினி.. ஓடிவந்து வரவேற்ற அமைச்சர்.. பெங்களூரு சென்ற சூப்பர் ஸ்டார்!

பெங்களூரு விமான நிலையத்தில் ரஜினிகாந்த்.

பெங்களூரு விமான நிலையத்தில் ரஜினிகாந்த்.

புனித் ராஜ்குமாரை கவுரவிக்கும் விதமாக இன்று மாலை கர்நாடக சட்டமன்ற வளாகத்தில் கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவை மாநிலஅரசு ஏற்பாடு செய்துள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் தனி விமானத்தின் மூலம் கர்நாடகாவுக்கு இன்று சென்றார். அவரை மாநில அமைச்சர் ஓடோடி வந்து வரவேற்ற வீடியோ லைக்ஸை குவித்து வருகிறது.

  கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் புனித் ராஜ் குமார். அங்கு பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த புனித், முதுபெரும் நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். 49 வயதான புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

  அவரது மரணம் கன்னட திரையுலகையும் தாண்டி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் செய்து வந்த சேவைகள், அவரது மரணத்திற்கு பின்னர் அதிகம் பேசப்பட்டன. புனித்தின் மறைவு கர்நாடக திரையுலகிற்கு மிகப்பெரும் இழப்பாக அமைந்து விட்டதென, பல்வேறு பிரபலங்கள் கூறியுள்ளனர்.

  இருவர் முதல் எந்திரன் வரை ஐஸ்வர்யா ராயின் ஹிட் பாடல்கள் ஒரு லிஸ்ட்!

  இந்நிலையில் புனித் ராஜ்குமாரை கவுரவிக்கும் விதமாக இன்று மாலை கர்நாடக சட்டமன்ற வளாகத்தில் கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவை மாநிலஅரசு ஏற்பாடு செய்துள்ளது. கர்நாடகத்தில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும்.  இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

  இதையொட்டி தனி விமானத்தில் ரஜினிகாந்த் பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை மாநில சுகாதார அமைச்சர் கே. சுதாகர் விமான நிலையத்திற்கு ஓடோடி வந்து வரவேற்றார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  இந்தியன் 2 படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் தந்தை.. வைரல் அப்டேட்!

  ‘என்ன நடை.. என்ன ஸ்டைல்’ என்று ரஜினியின் வேகத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். மாலை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியை தவிர்த்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் விழாவில் பங்கேற்கிறார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Rajinikanth