• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தாதா சாகேப் பால்கே விருது... ஹூட் ஆப் தொடக்கம்... உற்சாகத்தில் ரஜினி!

தாதா சாகேப் பால்கே விருது... ஹூட் ஆப் தொடக்கம்... உற்சாகத்தில் ரஜினி!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெற, ரஜினி இன்று டெல்லி சென்றார்.

  • Share this:
    நாளை தனக்கு 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்தே' திரைப்படம் தீபாவளி விருந்தாக நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் ரஜினியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பாண்டியராஜன், சூரி, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

    இதற்கிடையில் இந்திய திரைப்படத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெற, ரஜினி இன்று டெல்லி சென்றார். புறப்படும் முன் தனது போயஸ்கார்டன் இல்லத்தின் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது பேசிய அவர், இந்த விருதை பெற்றதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். தனது வாழ்நாளில் இந்த விருதை பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்ற அவர், இருப்பினும் இந்த முக்கிய தருணத்தில் தனது குருநாதர் கே.பாலசந்தர் உயிருடன் இல்லை எனக் குறிப்பிட்டு உணர்ச்சிவசப்பட்டார்.



    அதோடு ட்விட்டரில், நாளை தனக்கு 2 முக்கிய நிகழ்வுகள் நடக்கவிருப்பதாகவும், தான் தாதா சாகேப் பால்கே விருது பெறுவதாகவும், தனது மகள் செளந்தர்யா உருவாக்கியுள்ள Hoote App-ஐ தனது குரலில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ரஜினி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: